உலக வர்த்தக அமைப்பு என்றால் என்ன? அதன் வரலாறு ஏன் அவசியம்?
உலக வர்த்தக அமைப்பு என்றால் என்ன?
உலக வர்த்தக அமைப்பு என்பதன் அடிப்படை நோக்கம் தங்குதடையற்ற சுதந்திர வர்த்தகமாகும். இந்த வர்த்தகம் பங்குபெறும் அனைத்து நாடுகளுக்கும் பயன்தரும். அரசு தன்னுடைய நாட்டின் உற்பத்தியாளர்களை பாதுகாப்பதாகக் கூறி வர்த்தகத்திற்குத் தடை ஏற்படுத்தினால் வர்த்தகத்தில் ஏற்படும் நன்மைகள் குறித்து விடும்.
வர்த்தக அமைப்பின் வரலாறு:
இரண்டாம் உலகப்போர் முடிந்த காலம். அங்கு தொடங்கிய "வளர்ந்த நாடுகளின்" வளர்ச்சி 1973ம் ஆண்டு நிகழ்ந்த முதல் எண்ணெய் அதிர்ச்சி (Oil Shock) வரை தொடர்ந்தது. இந்தக் காலகட்டத்தில் தான் அந்த நாடுகளின் செல்வம் கொழித்த காலம். இக்காலகட்டமே அந்நாடுகளின் பொற்காலமாகக் கருதப்படுகிறது.
இக்காலகட்டத்தில் (1973) என்ன நடந்தது:
உலகின் ஏழு எண்ணெய் சகோதரிகள் என்று அழைக்கப்படும் வளர்ந்த நாடுகளைச் சார்ந்த ஏழு பெரும் எண்ணெய் நிறுவனங்கள் தான் உலக எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் விற்பனையை கையில் வைத்திருந்தன. தன்னுடைய நாட்டின் வளங்களுக்கு தன்னால் விலை நிர்ணயிக்க முடியாத நிலையில் எண்ணெய் வளநாடுகள் இருந்தன. சந்தையில் அடிக்கும் கொள்ளை லாபத்தில் பங்கு கொள்ள முடியாத நிலையில் என்னை வள நாடுகள் சிக்கியிருந்த காலம் 1960 வரையில் மட்டுமே.
Seven Oil sisters:
1960ம் ஆண்டின் போது அரபு எண்ணெய் வள நாடுகள் அனைத்தும் இணைந்து OPEC (Organization of the Petroleum Exporting Countries) என்ற கூட்டமைப்பை உருவாகின. இதில் ஈரான் முன்னணி நாடக திகழ்ந்தது. இந்த கூட்டமைப்பு எண்ணெய் சகோதரிகளை மட்டும் அல்ல வளர்ந்த நாடுகளின் பொருளாதார ஏகாதிபத்திய கனவுக்கு பெரும் தடைக்கல்லாக முன்நின்றது. அடுத்த வருடங்களில் குபேர நாடுகளின் வளர்ச்சி பெரும் அளவு குறைந்து காணப்பட்டது. வேலைவாய்ப்பும் குறைந்து பொருளாதார நெருக்கடி அதிகரித்தது.
இந்நிலையில் ஆம் ஆண்டு யூதர்களின் புனிதத்திலும் புனித நாளான (1973 OCT 6) யோக் கிப்பூர் நாளில் எகிப்தும் ஸிரியாவும் அடுத்தடுத்து இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்தின. இப்படியிருக்க அமெரிக்காவுடனான இஸ்ரேலின் உறவிற்கு எதிராக எண்ணையை ஆயுதமாகக் கொண்டு பதிலடி தர சவுதி அதிபருக்கு நெருக்கடி கொடுத்தார் அன்வர் ஆசாத். அதேயாண்டு ஈரானும் சவுதியும் மற்ற ஐந்து அரபு நாடுகளும் சேர்ந்து எண்ணெய் விலையை உயர்த்துவதாக அறிவித்தன. இதன் தொடர்ச்சியாக அரபு நாடுகளின் எண்ணெய் அமைச்சர்கள் குவைத்தில் கூடினர். அமெரிக்காவை எதிர்ப்பதில் முன்னணி நாடாக திகழ்ந்த ஈராக் புது யோசனையை முன் வைத்தது. அரபு உலகில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளியான இஸ்ரேலின் நிறுவனங்களை அரசுடைமையாக்குவதன் மூலமும் அமெரிக்க வங்கிகளில் உள்ள அமெரிக்க பணத்தை மீட்டுக் கொள்வதன் மூலமும் எண்ணெய் தடையை தீவிர படுத்தமுடியும் என ஈராக் அறிவுறுத்தியது. ஆனால் இதை மற்ற அரபு நாடுகள் கேட்காத நிலையில் எண்ணெய் தடையை மேலும் அதிகரிப்பது என முடிவு செய்தனர். மேலும் 5% அதிகரிப்பு பின்னே 10% அதிகரிப்பு என தடை நீண்டு கொண்டே சென்றது. இதன் தாக்கம் வளர்ந்த நாடுகளின் எண்ணெய் நிலையத்தின் நீண்ட வரிசையில் எதிரொலித்தது. 1970 ஜனவரி 1'ல் பேரலுக்கு 1.38 டாலராக இருந்த எண்ணெய் விலை 1974'ல் 8.32 டாலராக சட்டென்று உயர்ந்தது. 1920களின் பண வீக்கத்தை திரும்ப கொண்டு வந்து விடுமோ என வளர்ந்த நாடுகள் அச்சம் கொண்ட காலம் அது. எண்ணெய்'யின் கடுமையான விலையேற்றத்தால் பாதிக்கப்பட்ட வளர்ந்த நாடுகள் 1979'ல் மீண்டும் நிகழ்ந்த விலையேற்றத்தால் மீண்டும் தீவிரமடைந்தது. பெட்ரோல் விலையேற்றத்தால் எரிசக்தியின் விளையும் கடுமையாக உயர்ந்தது. அந்நாடுகளின் உற்பத்தி செலவு அதிகரித்து லாபத்தின் அளவு சுருங்கியது. பொருளாதாரம் ஒரு விதமான மந்த நிலையை நோக்கி நகர்ந்தது.
இந்த நிலையில் தான் வளர்ந்த நாடுகள் தங்களது லாபத்தை தொடர்ந்து சம்பாதிக்க வேறு பல இடங்களில் தொழில்களை துவங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன. இதே காலகட்டத்தில் தான் உயிரியல் தொழில் நுட்பமும் மைக்ரோசிப் தொழில்நுட்பமும் வளர துவங்கின. இதனால் பொருள் உற்பத்தி செய்யும் முறை, உற்பத்தியாகும் பொருள்களின் தன்மை, என்ன மாதிரியான பொருள்கள் உற்பத்தியாகின்றன போன்றவற்றில் இமாலய மாற்றங்கள் ஏற்பட துவங்கின. இதன் விளைவாக உலகின் வளர்ந்த ஏழு நாடுகளின் பொருளாதாரம் பொருள் உற்பத்தி என்ற நிலையில் இருந்து சேவை பொருளாதாரமாக மாறியது.
General Agreement on Tariff and Trade:
உலக வர்த்தக அமைப்பிற்கு முன்பே GATT (General Agreement on Tariff and Trade) என்ற அமைப்பு இருந்தது. 1947'ல் 23 நாடுகள் சேர்ந்து (இந்தியா உட்பட) உருவாக்கியதே GATT. இதன் அடிப்படை நோக்கம் இருநாடுகளுக்கிடையே நடக்கும் வர்த்தகம் சட்டத்தின் அடிப்படையில் ஒரே சமயத்தில் பல நாடுகளின் முன்னிலையில் நடக்கும் போது வர்த்தக உறவு வெளிப்டையானதாக இருக்கும் என்பதேயாகும். மேலும் வர்த்தகத்தில் வேண்டிய நாடு வேண்டாத நாடு என்ற ஓரவஞ்சனை இல்லாமல் வர்த்தகம் வர்த்தகமாக நடக்கும். இதன் மூலம் பரிவர்த்தனை செலவும் குறையும். இதன் அடைப்படி நோக்கமும் பார்வையும் பொருள் வர்த்தகம் சார்ந்து மட்டுமே இருந்தது. அதாவது ஒரு நாட்டில் உற்பத்தியாகும் பொருள்கள் வர்த்தகம் செய்வதன் கூறுகளை பற்றி மட்டுமே விவாதித்து.
முதல் மூன்று சுற்றுகள் முடிந்த நிலையில் வளரும் நாடுகளுக்கு ஓர் உண்மை தென்பட்டது. அது என்னவென்றால் வளர்ந்த நாடுகள் தடையில்லா வர்த்தகம் பற்றி தொடர்ந்து வலியுறுத்துவதன் நோக்கம் வளரும் நாடுகளின் வர்த்தகத்திற்கு அதிக வாய்ப்பு என்பதை விட தங்கள் நாடுகளின் வர்த்தகத்தை பெருக்கிக்கொள்வதே. சொல்லப்போனால் வளரும் நாடுகளுக்கு வாய்ப்பே அளிக்காமல் வெறும் பேச்சிலேயே நன்மை பயப்பதோடு சரி. அதே சமயம் தனக்கு வாய்ப்பான நிலையை வளரும் நாடுகளில் அமைத்து கொள்வதே ஆகும். இதை பொறுக்காத 77 வளரும் நாடுகள் UNO'விடம் பேசி தொடங்கியதே UNCTAD (United Nations Conference on Trade and Development) என்ற அமைப்பு. இதில் வளரும் நாடுகளின் ஆதாயம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
இது இப்படியிருக்கும் போது தனது மொத்த பொருளாதாரத்தையும் சேவை, நிதி, கேளிக்கை போன்றவை ஆக்கிரமித்த 'வளர்ந்த நாடுகளின்' வளர்ச்சி குறையும். மேலும் பொருள் உற்பத்தியில் வளரும் நாடுகளின் பங்களிப்பு சரசரவென உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. வேலையின்மை அதிகரித்து கூலி குறைந்து அதன் எதிரொலியாய் உண்மை வருவாயும் (Real Income) குறையும் அபாயம் தென்பட்டது. இந்த சூழ்நிலையில் வளர்ந்த நாடுகள் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டுமானால் உற்பத்தி பொருள்களின் வர்த்தகத்தை நம்பினால் வேலைக்காகாது என்று உணர்ந்தது. ஆகவே தான் வர்த்தகம் என்றால் பொருள் தவிர இன்ன பிற ஆனால் லாபம் கொழிக்கும் வர்த்தகங்களான சேவை வர்த்தகம், முதலீடு வர்த்தகம் மற்றும் அறிவுசார் வர்த்தகம் போன்றவற்றை GATT'ல் நுழைக்க அரும்பாடு பட்டன. ஆனால் அதற்கு GATT, IMF, உலக வங்கி போன்றவை ஒத்துவராததால் வேறு அமைப்பை உருவாக்க முயற்சி மேற்கொண்டன.
GATT'ல் சேவை, வர்த்தகம் பற்றி பேசி வரி விளக்கு வாங்க முயற்சித்து அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில்தான் தங்கல் திட்டம் முன்வைக்கப் பட்டது. இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரபல இந்திய குடிமகன்கள் என 250 பேர் தங்கல் திட்டத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட்டனர். இது எதையும் கண்டு கொள்ளாமல் இந்திய பிரதிநிதி தங்கல் திட்டத்தை ஏற்பதாக கையெழுத்திட்டார். இந்தியா போன்றே 114 நாடுகள் மார்க்கீஸ் என்ற இடத்தில் ஒன்று கூடி கையெழுத்திட்டனர். 1995ஆம் ஆண்டு முதல் WTO செயல்பட தொடங்கியது.

வளர்ந்து வரும் நாடு என்றால் என்ன?
எந்தவொரு நாட்டில் பெரும்பாலான மக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேளாண்மையை சார்ந்து இருந்தும் வேளாண் உற்பத்தி திறன் குறைந்தும் அந்நாட்டின் அரசு மானியமும் சலுகையும் கொடுத்து வேளாண்துறையை பாதுகாத்தும் வருகின்றதோ அந்த நாடே வளர்ந்து வரும் நாடாகும்.
இக்காலகட்டத்தில் (1973) என்ன நடந்தது:
உலகின் ஏழு எண்ணெய் சகோதரிகள் என்று அழைக்கப்படும் வளர்ந்த நாடுகளைச் சார்ந்த ஏழு பெரும் எண்ணெய் நிறுவனங்கள் தான் உலக எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் விற்பனையை கையில் வைத்திருந்தன. தன்னுடைய நாட்டின் வளங்களுக்கு தன்னால் விலை நிர்ணயிக்க முடியாத நிலையில் எண்ணெய் வளநாடுகள் இருந்தன. சந்தையில் அடிக்கும் கொள்ளை லாபத்தில் பங்கு கொள்ள முடியாத நிலையில் என்னை வள நாடுகள் சிக்கியிருந்த காலம் 1960 வரையில் மட்டுமே.
Seven Oil sisters:
- Anglo-Iranian Oil Company
- Gulf Oil
- Royal Dutch Shell
- Standard Oil Company of California
- Standard Oil Company of New Jersey
- Standard Oil Company of New York
- Texaco
1960ம் ஆண்டின் போது அரபு எண்ணெய் வள நாடுகள் அனைத்தும் இணைந்து OPEC (Organization of the Petroleum Exporting Countries) என்ற கூட்டமைப்பை உருவாகின. இதில் ஈரான் முன்னணி நாடக திகழ்ந்தது. இந்த கூட்டமைப்பு எண்ணெய் சகோதரிகளை மட்டும் அல்ல வளர்ந்த நாடுகளின் பொருளாதார ஏகாதிபத்திய கனவுக்கு பெரும் தடைக்கல்லாக முன்நின்றது. அடுத்த வருடங்களில் குபேர நாடுகளின் வளர்ச்சி பெரும் அளவு குறைந்து காணப்பட்டது. வேலைவாய்ப்பும் குறைந்து பொருளாதார நெருக்கடி அதிகரித்தது.
First OPEC Countries: Iran, Iraq, Kuwait, Saudi Arabia, Venezuela.
இந்நிலையில் ஆம் ஆண்டு யூதர்களின் புனிதத்திலும் புனித நாளான (1973 OCT 6) யோக் கிப்பூர் நாளில் எகிப்தும் ஸிரியாவும் அடுத்தடுத்து இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்தின. இப்படியிருக்க அமெரிக்காவுடனான இஸ்ரேலின் உறவிற்கு எதிராக எண்ணையை ஆயுதமாகக் கொண்டு பதிலடி தர சவுதி அதிபருக்கு நெருக்கடி கொடுத்தார் அன்வர் ஆசாத். அதேயாண்டு ஈரானும் சவுதியும் மற்ற ஐந்து அரபு நாடுகளும் சேர்ந்து எண்ணெய் விலையை உயர்த்துவதாக அறிவித்தன. இதன் தொடர்ச்சியாக அரபு நாடுகளின் எண்ணெய் அமைச்சர்கள் குவைத்தில் கூடினர். அமெரிக்காவை எதிர்ப்பதில் முன்னணி நாடாக திகழ்ந்த ஈராக் புது யோசனையை முன் வைத்தது. அரபு உலகில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளியான இஸ்ரேலின் நிறுவனங்களை அரசுடைமையாக்குவதன் மூலமும் அமெரிக்க வங்கிகளில் உள்ள அமெரிக்க பணத்தை மீட்டுக் கொள்வதன் மூலமும் எண்ணெய் தடையை தீவிர படுத்தமுடியும் என ஈராக் அறிவுறுத்தியது. ஆனால் இதை மற்ற அரபு நாடுகள் கேட்காத நிலையில் எண்ணெய் தடையை மேலும் அதிகரிப்பது என முடிவு செய்தனர். மேலும் 5% அதிகரிப்பு பின்னே 10% அதிகரிப்பு என தடை நீண்டு கொண்டே சென்றது. இதன் தாக்கம் வளர்ந்த நாடுகளின் எண்ணெய் நிலையத்தின் நீண்ட வரிசையில் எதிரொலித்தது. 1970 ஜனவரி 1'ல் பேரலுக்கு 1.38 டாலராக இருந்த எண்ணெய் விலை 1974'ல் 8.32 டாலராக சட்டென்று உயர்ந்தது. 1920களின் பண வீக்கத்தை திரும்ப கொண்டு வந்து விடுமோ என வளர்ந்த நாடுகள் அச்சம் கொண்ட காலம் அது. எண்ணெய்'யின் கடுமையான விலையேற்றத்தால் பாதிக்கப்பட்ட வளர்ந்த நாடுகள் 1979'ல் மீண்டும் நிகழ்ந்த விலையேற்றத்தால் மீண்டும் தீவிரமடைந்தது. பெட்ரோல் விலையேற்றத்தால் எரிசக்தியின் விளையும் கடுமையாக உயர்ந்தது. அந்நாடுகளின் உற்பத்தி செலவு அதிகரித்து லாபத்தின் அளவு சுருங்கியது. பொருளாதாரம் ஒரு விதமான மந்த நிலையை நோக்கி நகர்ந்தது.
இந்த நிலையில் தான் வளர்ந்த நாடுகள் தங்களது லாபத்தை தொடர்ந்து சம்பாதிக்க வேறு பல இடங்களில் தொழில்களை துவங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன. இதே காலகட்டத்தில் தான் உயிரியல் தொழில் நுட்பமும் மைக்ரோசிப் தொழில்நுட்பமும் வளர துவங்கின. இதனால் பொருள் உற்பத்தி செய்யும் முறை, உற்பத்தியாகும் பொருள்களின் தன்மை, என்ன மாதிரியான பொருள்கள் உற்பத்தியாகின்றன போன்றவற்றில் இமாலய மாற்றங்கள் ஏற்பட துவங்கின. இதன் விளைவாக உலகின் வளர்ந்த ஏழு நாடுகளின் பொருளாதாரம் பொருள் உற்பத்தி என்ற நிலையில் இருந்து சேவை பொருளாதாரமாக மாறியது.
General Agreement on Tariff and Trade:
உலக வர்த்தக அமைப்பிற்கு முன்பே GATT (General Agreement on Tariff and Trade) என்ற அமைப்பு இருந்தது. 1947'ல் 23 நாடுகள் சேர்ந்து (இந்தியா உட்பட) உருவாக்கியதே GATT. இதன் அடிப்படை நோக்கம் இருநாடுகளுக்கிடையே நடக்கும் வர்த்தகம் சட்டத்தின் அடிப்படையில் ஒரே சமயத்தில் பல நாடுகளின் முன்னிலையில் நடக்கும் போது வர்த்தக உறவு வெளிப்டையானதாக இருக்கும் என்பதேயாகும். மேலும் வர்த்தகத்தில் வேண்டிய நாடு வேண்டாத நாடு என்ற ஓரவஞ்சனை இல்லாமல் வர்த்தகம் வர்த்தகமாக நடக்கும். இதன் மூலம் பரிவர்த்தனை செலவும் குறையும். இதன் அடைப்படி நோக்கமும் பார்வையும் பொருள் வர்த்தகம் சார்ந்து மட்டுமே இருந்தது. அதாவது ஒரு நாட்டில் உற்பத்தியாகும் பொருள்கள் வர்த்தகம் செய்வதன் கூறுகளை பற்றி மட்டுமே விவாதித்து.
முதல் மூன்று சுற்றுகள் முடிந்த நிலையில் வளரும் நாடுகளுக்கு ஓர் உண்மை தென்பட்டது. அது என்னவென்றால் வளர்ந்த நாடுகள் தடையில்லா வர்த்தகம் பற்றி தொடர்ந்து வலியுறுத்துவதன் நோக்கம் வளரும் நாடுகளின் வர்த்தகத்திற்கு அதிக வாய்ப்பு என்பதை விட தங்கள் நாடுகளின் வர்த்தகத்தை பெருக்கிக்கொள்வதே. சொல்லப்போனால் வளரும் நாடுகளுக்கு வாய்ப்பே அளிக்காமல் வெறும் பேச்சிலேயே நன்மை பயப்பதோடு சரி. அதே சமயம் தனக்கு வாய்ப்பான நிலையை வளரும் நாடுகளில் அமைத்து கொள்வதே ஆகும். இதை பொறுக்காத 77 வளரும் நாடுகள் UNO'விடம் பேசி தொடங்கியதே UNCTAD (United Nations Conference on Trade and Development) என்ற அமைப்பு. இதில் வளரும் நாடுகளின் ஆதாயம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
இது இப்படியிருக்கும் போது தனது மொத்த பொருளாதாரத்தையும் சேவை, நிதி, கேளிக்கை போன்றவை ஆக்கிரமித்த 'வளர்ந்த நாடுகளின்' வளர்ச்சி குறையும். மேலும் பொருள் உற்பத்தியில் வளரும் நாடுகளின் பங்களிப்பு சரசரவென உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. வேலையின்மை அதிகரித்து கூலி குறைந்து அதன் எதிரொலியாய் உண்மை வருவாயும் (Real Income) குறையும் அபாயம் தென்பட்டது. இந்த சூழ்நிலையில் வளர்ந்த நாடுகள் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டுமானால் உற்பத்தி பொருள்களின் வர்த்தகத்தை நம்பினால் வேலைக்காகாது என்று உணர்ந்தது. ஆகவே தான் வர்த்தகம் என்றால் பொருள் தவிர இன்ன பிற ஆனால் லாபம் கொழிக்கும் வர்த்தகங்களான சேவை வர்த்தகம், முதலீடு வர்த்தகம் மற்றும் அறிவுசார் வர்த்தகம் போன்றவற்றை GATT'ல் நுழைக்க அரும்பாடு பட்டன. ஆனால் அதற்கு GATT, IMF, உலக வங்கி போன்றவை ஒத்துவராததால் வேறு அமைப்பை உருவாக்க முயற்சி மேற்கொண்டன.
GATT'ல் சேவை, வர்த்தகம் பற்றி பேசி வரி விளக்கு வாங்க முயற்சித்து அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில்தான் தங்கல் திட்டம் முன்வைக்கப் பட்டது. இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரபல இந்திய குடிமகன்கள் என 250 பேர் தங்கல் திட்டத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட்டனர். இது எதையும் கண்டு கொள்ளாமல் இந்திய பிரதிநிதி தங்கல் திட்டத்தை ஏற்பதாக கையெழுத்திட்டார். இந்தியா போன்றே 114 நாடுகள் மார்க்கீஸ் என்ற இடத்தில் ஒன்று கூடி கையெழுத்திட்டனர். 1995ஆம் ஆண்டு முதல் WTO செயல்பட தொடங்கியது.
Comments
Post a Comment