கம்யூனிஸத்தில் ஒரு கேள்வி

தோழர்களுக்கு வணக்கம்.
பெரியாரியம் பேசும் கம்யூனிசம் பேசும் அம்பேத்கரியும் பேசும் நாம் நிறைய படிக்க வேண்டியுள்ளது. அப்படி படிக்கும் போது பல குழப்பங்களும் தெளிவுகளும் உருவாகும். அதில் தோன்றிய ஒரு குழப்பமே இந்த பதிவு. முதலில் இப்படி பெரியார் பேசும் சமத்துவம் பேசும் அனைவரும் சொல்வது அல்லது நோக்கி செல்வது கம்யூனிசமாக உள்ளது. இரண்டாவது கடவுள் மறுப்பு. கடவுள் மறுப்பென்றால் சார்லஸ் டார்வின் கொள்கைகளை நாம் ஒத்து கொள்கிறோம் என்று பொருள். இயற்கையில் தோன்றிய விபத்து மனித உயிர். எது நிலைத்து வாழ முடியுமோ அது வாழும். கம்யூனிசம் என்றால் முதலாளித்துவத்தை எதிர்க்கிறோம் என்று பொருள்.

இப்படி இருக்க இங்கே தான் குழப்பம். கடவுள் இல்லை என்று கூறும் நாம் கம்யூனிசத்தை உயர்த்தி பிடிக்கிறோம். முதலாளித்துவ கொள்கையை பார்த்தால் அவர்கள் கடவுளின் பிள்ளைகள், அவர்கள் செய்வது இறைவனுக்கும் தன் பிள்ளைகளுக்கும் செய்யும் கடமை என்று கருதுவார்கள். டார்வின் சொல்வது Surival of the fittest. முதலாளித்துவம் சொல்வதும் அதேதான். யாரால் பணம் ஈட்ட முடியுமோ அவர்கள் வாழ்வார்கள். மேலும் கம்யூனிச கொள்கை படி நாட்டு வளங்கள் எல்லாமே மக்களை சாரும். அனைவர்க்கும் சரி சமமாக பிரித்து தர வேண்டும். அது சரியென்றால் ஆடம் ஸ்மித் சொல்லும் உற்பத்தி திறன் தேவை இல்லாத ஒன்றாகி விடுமே.

கம்யூனிசம் அப்படி ஒரு புறம் இருக்க சோசியலிசத்தை கையில் எடுத்தால் இந்நிலை தெளிவாகும். ஆனால் சோசியலிசத்தை பொறுத்தவரையில் நீ கடிகாரம் வாங்கி கட்டலாம். ஆனால் கடிகாரம் தயாரிக்க முடியாது. யாரால் அதிக திறனுடன் செயல்பட முடியுமோ அவர் பொருள் வளம் உள்ளவர் ஆவர். அப்படி இருக்குமானால் முதலாளித்துவம் அங்கேயும் நிலைக்கும். இப்படியிருக்க பெண்ணுக்கு சம உயிரிமை வேண்டும் என கேட்கும் நாம் முதலாளித்துவ அடிமைத்தனம் இல்லாத உலகம் வேண்டும் என நினைக்கும் நாம் எதை நோக்கி நகர்கிறோம். இந்த குழப்பம் தீர என்ன வழி? எதை படிக்க வேண்டும்? 

Comments